யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : அக்தரின் பந்துவீச்சில் வீழ்ந்தது டெல்லி அணி
கோல்கத்தா (ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 11:52 IST )
இந்தியன் பிரீமியர் லீக்கின் 35-வது இருபதுக்கு 20 போட்டியில், அக்தரின் அபார பந்துவீச்சின் துணையுடன், டெல்லி அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் கோல்கத்தா அணி வீழ்த்தியது.

இப்போட்டியில் 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேவாக் தலைமையிலான டெல்லி அணி, 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியின் மிஷ்ரா 31 ரன்களையும், தில்ஷான் 25 ரன்களையும் எடுத்தனர்; கம்பீர் மற்றும் மகரூஃப் ஆகியோர் தலா 10 ரன்களையும் எடுத்தனர்; ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களையே எடுத்தனர்.

கோல்கத்தா தரப்பில், சிறப்பாக பந்துவீசி திணறடித்த ஷோயிப் அக்தர் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கே ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. சுலா 3 விக்கெட்டுகளையும், திண்டா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, கோல்கத்தா அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.

அந்த அணியின் சல்மான் பட் 48 ரன்களையும், ஹஸ்சி 31 ரன்களையும் எடுத்து ரன் எண்ணிகையை ஓரளவு உயர்த்தினர்.

இந்த 5-வது வெற்றியின் மூலம் கோல்கத்தா அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 4-ம் இடத்தில் உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹர்பஜனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் : நானாவதி
சூதாட்டம்: சாமுயெல்ஸ்க்கு 2 ஆண்டுகள் தடை
ஐபிஎல்: சென்னைக்கு எதிராக களமிறங்கும் சச்சின்
ஐபிஎல் 20-20: பெ‌ங்களூரு அ‌ணி மீண்டும் தோல்வி
திராவிட், சாருவை நம்பியது பெரும் தவறு : மல்லையா
ஐபிஎல் : டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace