|
| ஹர்பஜனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் : நானாவதி |
| மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008 ( 15:51 IST ) | |
ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று சமர்பித்த சுதிர் நானாவதி, ஹர்ஜனுக்கு இன்னும் ஓர் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
14 பக்கங்கள் கொண்ட தனது விசாரணை அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டியிடம் , இன்று அளித்தார் நானாவதி.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நானாவதி , ஹர்பஜன் ஏற்கனவே கடுமையாக தண்டிக்கப்பட்டுவிட்டார் என்பதாலும், அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டார் எனப்தாலும் அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் விசாரணையின்பது ஹர்பஜன வாக்குவாதம் ஏதும் செய்யவில்லை.மேலும் ஸ்ரீசாந்த் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டதால்தான் ஹர்பஜன் அவரை அறைந்தார் என சம்பவம் அம்பயர் அமீஷ் ஷகிபாவும் கூறியுள்ளார்.அதோடு ஸ்ரீசாந்தும் தாம் அந்த சமபவத்தை மறந்துவிட்டதாகவும், ஹர்பஜனை மன்னித்து விட்டதாகவும் கூறியுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும் என நானாவதி மேலும் கூறினார்.
இதனிடையே விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்ட ரத்னாகர் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் , இந்த அறிக்கையை தாம் வாரிய தலைவர் ஷரத் பவாரிடம் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அறிக்கையில் இடம் பெற்றுள்ள விவரங்கள் அப்போது வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|