|
| சூதாட்டம்: சாமுயெல்ஸ்க்கு 2 ஆண்டுகள் தடை |
| போர்ட் ஆப் ஸ்பெயின் (ஏஜென்சி), 13 மே 2008 ( 13:01 IST ) | |
கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடனான தொடர்பு உறுதி செய்யப்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மார்லோன் சாமுயெல்ஸ்க்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்தது.
அப்போது, தனது அணியின் நடவடிக்கைகள் பற்றிய ரகசிய தகவல்களை இவர் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் சூதாட்டத் தரகர் முகேஷ் கோஷாருக்கு தெரிவித்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை கமிட்டி விசாரணை நடத்தி வந்தது. இதில், கிரிக்கெட் சூதாட்டக்காரருடன் சாமுயெல்ஸ்க்கு தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, சாமுயெல்ஸ்க்கு 2 ஆண்டுகள் தடை விதித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|