|
| ஐபிஎல்: சென்னைக்கு எதிராக களமிறங்கும் சச்சின் |
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008 ( 12:29 IST ) | |
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் நாளைய ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக சச்சின் தெண்டுல்கர் களமிறங்குகிறார்.
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சச்சின் உள்ளார். காயம் காரணமாக அவர் இதுவரை விளையாடவில்லை. சச்சினுக்கு பதிலாக, அணியின் கேப்டனாக பொலாக் செயல்பட்டு வருகிறார். தற்போது சச்சின் குணமடைந்து, முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நாளைய ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதனால், மும்பை அணியின் கேப்டனாக களமிறங்கும் சச்சின், தனது முதல் ஆட்டத்திலேயே சென்னை அணிக்கு எதிராக விளையாடுகிறார். .
நாளைய ஆட்டத்தில் ஜெயசூர்யாவுடன் துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடவிருப்பதாகவும் சச்சின் தெரிவித்தார்.
இதுவரை, 7 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளன.
ஆனால், சென்னை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|