|
| ஐபிஎல் : டெல்லியை வீழ்த்தியது ராஜஸ்தான் |
| ஜெய்ப்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 11:08 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் 33-வது இருபதுக்கு 20 போட்டியில், டெல்லி அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வார்னே தலைமையிலான ராஜஸ்தான் அணி, 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
அந்த அணியின் வாட்சன் 74 ரன்களையும், ஸ்மித் 24 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
முன்னதாக, சேவாக் தலைமையிலான டெல்லி அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் மகரூஃப் 39 ரன்களையும், கவுதம் கம்பீர் 31 ரன்களையும் எடுத்தனர்; மிஸ்ரா 18 ரன்களையும், சேவாக் 17 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களையே எடுத்தனர்.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக ராஜஸ்தானின் வாட்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளும் தொடர்ந்து முதல் நிலையில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|