|
| ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் : இந்திய அணி சாம்பியன் |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008 ( 10:34 IST ) | |
இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில், இந்திய அணி தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.
குருனேகலாவிலுள்ள வெலகேதரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 177 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இப்போட்டியில், 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 35.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியின் குமாரி காமி 23 ரன்களையும், சிரிவர்த்தனே 20 ரன்களையும் எடுத்தனர்; ஏனையோர் சொற்ப ரன்களையே எடுத்தனர்.
இந்திய தரப்பில் நீது டேவிட், புஜரே சீமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரும்லி தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் ஆஷா 97 ரன்களையும், மிதாலி ராஜ் 66 ரன்களையும், ரும்லி தர் 50 ரன்களையும் குவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|