யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : ஐதராபாத்தை வென்றது கோல்கத்தா
கோல்கத்தா (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 10:17 IST )
இந்தியன் பிரீமியர் லீக்கின் 32-வது இருபதுக்கு 20 போட்டியில், ஐதராபாத் அணியை 23 ரனகள் வித்தியாசத்தில் வென்றது கோல்கத்தா.

கோல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் வேணுகோபால் ராவ் சிறப்பாக பேட் செய்து ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து வெற்றிக்குப் போராடினார். ரோஹித் ஷர்மா 31 ரன்களையும், கில்கிறிஸ்ட் 24 ரன்களையும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.

கோல்கத்தா தரப்பில் திண்டா 3 விக்கெட்டுகளையும், கங்குலி 2 விக்கெட்டுகளையும், உமர்குல் மற்றும் சுக்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக கோல்கத்தா தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் கேப்டன் கங்குலி (ஆட்டநாயகன்) 91 ரன்களையும், ஹஸ்சி 57 ரன்களையும் குவித்து ரன் எணிக்கையை வெகுவாக உயர்த்தினர். சோப்ரா 14 ரன்களை எடுத்தார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் கோல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் இந்தத் தொடரில் 4-ம் நிலைக்கு முன்னேறியுள்ளது.

அதேநேரத்தில், ஐதராபாத் அணியின் அறை இறுதி வாய்ப்பு குறைந்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அஸ்லான் ஷா ஹாக்கி : கனடாவை வீழ்த்தியது இந்தியா
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருது
பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹ‌ர்பஜ‌ன் முகமூடி கிழிந்து விட்டது: பாண்டிங்
ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் விவகாரம்: செவ்வாயன்று நானாவதி அறிக்கை
இத்தாலி ஒபன் : பயஸ், பூபதி தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace