யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அஸ்லான் ஷா ஹாக்கி : கனடாவை வீழ்த்தியது இந்தியா
இபோ (ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 09:42 IST )
அஸ்லாம் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் கனடாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இபோவில் நேற்று நடந்த இப்போட்டியின் முதல் பாதியில் கனடா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கிடைத்த 2-வது பெனால்டி கார்னர் வாய்ப்பை, கனடா வீரர் வெய்ன் பெர்னாண்டஸ் கோலாக மாற்றினார்.

அதைத்தொடர்ந்து, இரண்டாவது பாதியில் 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை, இந்தியாவின் திவாகர் ராம் கோலாக்கினார்; 51-வது நிமிடத்தில் அவரே மற்றொரு கோல் அடித்தார். 53-வது நிமிடத்தில் கேப்டன் சர்தார்சிங் அடித்த பந்தை, சுனில் லேசாக திருப்ப, அதனை மற்றொரு இந்திய வீரர் ஷிவேந்திரசிங் கோலாக்கினார்.

மொத்தம் 7 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், முதல் 2 ஆட்டங்களில் முறையே நியூசிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகளிடம் இந்தியா தோல்வியுற்றது.

தற்போது முதல் வெற்றியைச் சுவைத்துள்ள இந்திய அணி, பெல்ஜியத்தை இன்று எதிர்கொள்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருது
பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹ‌ர்பஜ‌ன் முகமூடி கிழிந்து விட்டது: பாண்டிங்
ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் விவகாரம்: செவ்வாயன்று நானாவதி அறிக்கை
இத்தாலி ஒபன் : பயஸ், பூபதி தோல்வி
ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace