|
| செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருது |
| புதுடெல்லி(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008 ( 14:05 IST ) | |
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷண் விருதும், பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுக்கு 13 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 35 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.
பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த 5-ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அன்று முதல் கட்டமாக 56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.
இந்ந்லையில், மற்றவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா , ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.இவ் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, லட்சுமி மிட்டல், பிரபல சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே.பச்சூரி, பேராசிரியர் பிருத்விநாத் தார், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவன தலைவர் ஈ.ஸ்ரீதரன் ஆகியோர் பத்ம விபூஷண் விருது பெற்றனர்.
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, பொருளாதார நிபுணர் லார்டு மேக்நாத் தேசாய், விசுவநாதன் ராமச்சந்திரன், பேராசிரியர் கவுசிக் பாசு , கந்திபுடி பத்மநாபய்யா, உஸ்தாத் ஆசாத் அலிகான், பஷீர் அகமது, இந்திரஜித் கவுர் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பத்ம பூஷண் விருதுகளை வழங்கினார்.
பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், டாக்டர் சி.யு.வேல்முருகேந்திரன், நடிகை மாதுரி தீட்சித், இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஆலிவுட் டைரக்டர் மனோஜ் நைட் சியாமளன் உள்ளிட்டோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.
இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|