யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பஞ்சாப்பை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2008   ( 13:59 IST )
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.இப்போட்டியில் பாலாஜி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் யுவராஜ்சிங் முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

இதையடுத்து இன்னிங்சை தொடங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த வித்யுத் அதே ஓவரில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிளமிங்(1 ரன்), ஸ்ரீசாந்த் வீசிய அடுத்த ஓவரில் வீழ்ந்தார்.

இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுரேஷ் ரெய்னாவும், தமிழக ரஞ்சி வீரர் பத்ரிநாத்தும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதன் பின்னர் கேப்டன் தோனி இறங்கினார். பத்ரிநாத்தும், தோனியும் பஞ்சாப் பவுலிங்கை சிதறடித்தனர். டோனி, பியுஷ் சாவ்லா பந்து வீச்சில் 3 மெகா சிக்சர்களை விரட்டினர். இந்த ஜோடியின் அதிரடியான ஆட்டத்தினால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகள் சரிந்தன. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. `ஹாட்ரிக்' உள்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பாலாஜி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.சென்னை அணிக்கு இது 6-வது வெற்றியாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஹ‌ர்பஜ‌ன் முகமூடி கிழிந்து விட்டது: பாண்டிங்
ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் விவகாரம்: செவ்வாயன்று நானாவதி அறிக்கை
இத்தாலி ஒபன் : பயஸ், பூபதி தோல்வி
ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதாக வென்றது ராஜஸ்தான்
ஹர்பஜன், ஸ்ரீசாந்திடம் விசாரணை முடிந்தது; மே 10-ல் அறிக்கை
ஐபிஎல் கிரிகெட் சூதாட்டம் : 10 பேர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace