|
| ஹர்பஜன்-ஸ்ரீசாந்த் விவகாரம்: செவ்வாயன்று நானாவதி அறிக்கை |
| அகமதாபாத் (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 15:40 IST ) | |
ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கமிஷனர் சுதிர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் செவ்வாய்க்கிழமை அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "முன்னதாக, திங்கள்கிழமைதான் அறிக்கையை அளிக்கவிருந்தேன். ஆனால், அதை செவ்வாய்க்கிழமையிலேயே செய்வது என முடிவெடுத்துள்ளேன்' என்றார்.
அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு செவ்வாய்க்கிழமை வரை அவகாசம் இருப்பதாக தெரிவித்த மூத்த வழக்கறிஞரான அவர், "குஜராத் உயர் நீதிமன்றத்தில் சில வழக்குகளுக்காக வாதாட வேண்டியிருப்பதால் ஒரு நாள் தள்ளிவைத்துள்ளேன்' என்று கூறினார்.
மேலும், "நான் அளிக்கவுள்ள அறிக்கையில், எவ்விதமான தண்டனை வழுங்குவது என்பது பற்றி பரிந்துரைக்கப் போவதில்லை" என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு கமிஷனராக நியமிக்கப்பட்ட நானாவதி, ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்திடம் நேற்று விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|