|
| ஹர்பஜன், ஸ்ரீசாந்திடம் விசாரணை முடிந்தது; மே 10-ல் அறிக்கை |
| அகமதாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 18:45 IST ) | |
'அறை' விவகாரம் தொடர்பாக, ஹர்பஜன் சிங்கிடமும் ஸ்ரீசாந்திடமும் இன்று விசாரணை நடத்தி முடித்த கமிஷனர் சுதிர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.
ஹர்பஜனிடமும் ஸ்ரீசாந்திடமும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட நானாவதி, அவ்விருவரிடமும் பல்வேறு வகையான கேள்விகளைக் கேட்டு, இரு தரப்பு விவரங்களையும் அறிந்துகொண்டார்.
பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷா முன்னிலையில், குஜராத் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடந்த இந்த விசாரணையில் இரு வீரர்களுக்கும் திருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசாரணை தொடர்பாக நிரஞ்சன் ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது முக்கியமான அறிக்கையாகும் என்று மட்டும் கூறிவிட்டு விவரிக்க மறுத்துவிட்டார்.
இருவரையும் விசாரித்த கமிஷனர் நானாவதி கூறுகையில், தனக்குத் தேவையான கேள்விகளை இருவரிடமும் கேட்டதாகவும், அவர்களது பதில் தனக்கு திருப்திகரமாக இருந்ததாகவும் கூறினார்.
அறிக்கை வெளிவந்தவுடன் முடிவு தெரிந்துவிடும் என்ற அவர், ஹர்பஜனுடன் ஒரு மணி 15 நிமிடமும், ஸ்ரீசாந்திடம் 30 நிமிடமும் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் காரணமாக, 11 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜனுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படுவதும் அல்லது எச்சரிக்கையுடன் விடுவித்துவிடுவதும் நானாவதி திங்கள்கிழமை அளிக்கவுள்ள அறிக்கையை பொறுத்ததே.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|