|
| ஐபிஎல் : கோல்கத்தாவிடம் போராடி தோற்றது பெங்களூரு |
| கோல்கத்தா (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 11:50 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் 29-வது இருபதுக்கு 20 போட்டியில், கோல்கத்தா அணியிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியுற்றது பெங்களூரு அணி.
மழையின் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 16 ஓவர்கள் என்ற நிலையில் துவங்கப்பட்ட இப்போட்டியில், 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 16 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் பவுச்சர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்து, மிகுந்த சிரத்தையுடன் போராடினார். கேமரூன் வைட் 30 ரன்களைச் சேர்த்தார். துவக்க ஆட்டக்காரர் அருண் குமார் 22 ரன்களை எடுத்தார். சந்திரபால் 7 ரன்களையும், திராவிட் 5 ரன்களையுமே எடுத்தனர்; பிரவீன் குமார் ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.
கோல்கத்தா தரப்பில் இஷாந்த் ஷர்மா, கங்குலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முன்னதாக டாஸ் வென்று முதலில் களமிறங்கிய கோல்கத்தா அணி தனது இன்னிங்ஸ்சில், 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹஸ்சி 26 ரன்களையும், கங்குலி 20 ரன்களையும் எடுத்தனர்; சஹா மற்றும் முரளி கார்த்திக் ஆகியோர் தலா 17 ரன்களையும், டைபு 15 ரன்களையும் சேர்த்தனர்; ஷுக்லா 11 ரன்களையும், ஹாட்ஜ் 10 ரன்களையும் எடுத்தனர்.
பெங்களூரு தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் மற்றும் பிரவீண் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் கோல்கத்தா அணி, இதுவரை 7 போட்டிகளில் 3-ல் வென்று 6 புள்ளிகளுடன் 5-ம் இடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்திலுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|