|
| ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி பதவியிலிருந்து கவாஸ்கர் விலகல் |
| துபாய் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 18:16 IST ) | |
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து, சுனில் கவாஸ்கர் இன்று திடீரென விலகினார்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பதவியிலிருந்து வந்த அவர் தனது இந்த முடிவு குறித்து கூறுகையில், இந்தப் பொறுப்பை முழு மன நிறைவுடன் செய்து வந்ததாகவும், ஊடகங்களில் மேற்கொள்ளும் தனது பணி நிமித்தம் காரணமாக இரண்டு பொறுப்புகளை கவனித்துக் கொள்வது கடினமாக உள்ளதாகவும் கூறினார்.
கவாஸ்கரின் பதவி விலகல் குறித்து ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரிக்கெட் கமிட்டி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், கவாஸ்கர் தனது முடிவை ஐசிசியிடம் நேற்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகைகளில் கட்டுரையாளராகவும் வர்ணனையாளராகவும் இருப்பது, ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக செயல்படுவது என ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு பணிகளில் ஈடுபடக்கூடாது என்று ஐசிசி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, கவாஸ்கர் தனது விலகல் முடிவை எடுத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|