|
| ஐபிஎல் 20-20: ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை! |
| மும்பை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 11:52 IST ) | |
ஐபிஎல் இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஸ்மித்தும், அஸ்னோட்கரும் களம் இறங்கினர். ஸ்மித் 5, யூசுப் பதான் 1, வாட்சன் 32, அஸ்னோட்கர் 39 ரன்கள் எடுத்தனர்.
16.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி தரப்பில் நெக்ரா 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, பிராவோ, ரஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து மும்பை அணி களமிறங்கியது. ஜெயசூர்யா 18, தகவாலே 34, உத்தப்பா 34 மற்றும் நாயர் 12 ரன்கள் எடுத்தனர். 15.1 ஓவர்களிலேயே மும்பை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக நெக்ரா தேர்ந்து எடுக்கப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|