யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இறுதியாக ஒரு வாய்ப்பு தாருங்கள்: ஹர்பஜன் சிங் முறையீடு
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 18:47 IST )
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தமக்கு தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவும் நிலையில், இறுதியாக ஒரு வாய்ப்பை வழங்குமாறு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஹர்பஜன் சிங் முறையிட்டுள்ளார்.

ஸ்ரீசாந்தை கன்னத்தில் ஹர்பஜன் அறைந்த விவகாரம் குறித்து விசாரணை செய்துவரும் கமிஷ்னர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.

இந்நிலையில், தன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொள்ளும் விதமாக பிசிசிஐ-க்கு ஹர்பஜன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவத்துக்கு தாம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுவிட்டாதாகவும், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்னதாக 'தனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தரவேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளவும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷாவிடம் கேட்டபோது, ஹர்பஜன் நிறைய கடிதங்களை அனுப்பி வருவதாகவும், விசாரணை அறிக்கைக்காக தாம் காத்துக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

10 சர்வதேச போட்டிகளில் தடை?

ஹர்பஜனுக்கு குறைந்தபட்சமாக ஐந்து டெஸ்ட் மற்றும் 10 சர்வதேச ஒருதினப் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், இந்திய கிரிக்கெட்டுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழாமல் இருக்க வழிவகுக்கப்படும் என்றும், ஹர்பஜனுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை, அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் காரணமாக, 11 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது 'அறை'க்கு முயன்ற ஹர்பஜன்!

தற்போது ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவ்விருவரையும் நானாவதி நேரடியாக விசாரணை செய்யவுள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த நானவதி, வீடியோ பதிவில் தாம் கண்ட காட்சி, தமக்கு அதிர்ச்சியை உண்டாக்கியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மொஹாலியில் சம்பவம் நிகழ்ந்தபோது, முதல் அறையோடு நின்றுகொள்ளாமல், இரண்டாவதாக அறையவும் ஹர்பஜன் முயன்றிருப்பது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிறந்த வீரர் விருதுக்கு தோனி, கங்குலி, திராவிட் பரிந்துரை
'ஹர்பஜன் மீது முன்மாதிரி நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு'
ஐபிஎல் 20-20: சென்னை 'ஹாட்ரிக்' தோல்வி
'ஹர்பஜன் அறை' வீடியோ காட்சி : நானாவதி அதிர்ச்சி
சச்சினுக்கு பத்ம விபூஷன் விருது!
ஐபிஎல் 20-20: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace