யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
'ஹர்பஜன் மீது முன்மாதிரி நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு'
மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 13:22 IST )
ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் மீது முன்மாதிரி நடவடிக்கை மேற்கொள்ள, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹர்பஜனுக்கு 10 சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்குத் தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம், இந்திய கிரிக்கெட்டுக்கு களங்கம் ஏற்படும் வகையிலான சம்பவங்கள் பிற்காலத்தில் நிகழாமல் இருக்க வழிவகுக்கப்படும் என்றும், ஹர்பஜனுக்கு அளிக்கப்படவுள்ள தண்டனை, அனைத்து ஆட்டக்காரர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'அறை' விவகாரம் குறித்து விசாரணை செய்துவரும் கமிஷ்னர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.

தற்போது ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவ்விருவரையும் நானாவதி நேரடியாக விசாரணை செய்யவுள்ளார்.

முன்னதாக, இந்த விவகாரம் காரணமாக 11 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட மும்பை அணியின் ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் 20-20: சென்னை 'ஹாட்ரிக்' தோல்வி
'ஹர்பஜன் அறை' வீடியோ காட்சி : நானாவதி அதிர்ச்சி
சச்சினுக்கு பத்ம விபூஷன் விருது!
ஐபிஎல் 20-20: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
பார்சிலோனா ஓபன் : 4-ம் முறையாக நாடல் சாம்பியன்
செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா : ஆனந்த்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace