யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
'ஹர்பஜன் அறை' வீடியோ காட்சி : நானாவதி அதிர்ச்சி
மும்பை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008   ( 15:46 IST )
ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த காட்சி பதிவான வீடியோவைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாக, கமிஷனர் சுதிர் நானாவதி கூறினார்.

ஸ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்த விவாகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்ட கமிஷ்னர் சுதிர் நானாவதி, தனது அறிக்கையை வாரியத் தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகளை இன்று நானாவதி பார்த்தார்.அப்போது, ஐபிஎல் தலைவரும் கமிஷ்னருமான லலித் மோதி, பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷா மற்றும் இணைச் செயலர் எம்.பி.பாண்டோவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையடுத்து நானாவதி செய்தியாளர்களிடம் கூறுகையில், தாம் வீடியோவில் கண்ட காட்சி, தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் , ஆனால் அதுவே தனது வேலையை சுலமாக்கியது என்றும், அந்த வீடியோ காட்சி அடுத்தக்கட்ட விசாரணைக்கு உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக, போட்டி நடுவர் ஃபரூக் என்ஜீனியரிடம் இருந்து அறிக்கையை பெற்றுக்கொண்ட அவர், ஸ்ரீசாந்தை விமர்சித்ததால் ஒரு போட்டிக்கு நீக்கப்பட்ட நடுவர் அமிஷ் சாயிப்பிடம் பேசியுள்ளார்.

இதையடுத்து, ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்தபோது, அவருக்குப் பின்னால் நின்றுக்கொண்டிருந்தாக கூறப்பட்ட மும்பை இந்தியன் அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்திடமும் நானாவதி பேசவுள்ளார்.

இந்நிலையில், ஹர்பஜன் மற்றும் ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படுள்ளது குறித்து நானாவதி கூறுகையில், ஹர்பஜன் இன்று ஆஜராவதாக கூறியுள்ளதாகவும், ஸ்ரீசாந்த் இன்னும் ஆஜாராகும் தேதியை முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இறுதியாக, இவ்விருவரிடமும் விசாரணையை ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிக்கவுள்ள நானாவதி, தனது அறிக்கையை வரும் திங்கள்கிழமை பிசிசிஐ-யிடம் அளிப்பார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சச்சினுக்கு பத்ம விபூஷன் விருது!
ஐபிஎல் 20-20: பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்
பார்சிலோனா ஓபன் : 4-ம் முறையாக நாடல் சாம்பியன்
செஸ் மறுமலர்ச்சியை நோக்கி இந்தியா : ஆனந்த்
இத்தாலிய ஒபன் : பயஸ், பூபதிக்கு முதல் சுற்று விலக்கு
ஐபிஎல் 20-20: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace