யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இத்தாலிய ஒபன் : பயஸ், பூபதிக்கு முதல் சுற்று விலக்கு
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008   ( 16:52 IST )
தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள இத்தாலிய ஒபன் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோருக்கு முதல் சுற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இப்போட்டிகளின் தரநிலையில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் பூபதி - பகாமஸின் மார்க் நெளலஸ் இணை தங்களது இரண்டாம் சுற்றில், ஸ்பெயின் ஃபெலிசியானோ லோபஸ் - ஃபெர்ணாண்டோ வெர்டாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் இகோர் ஆண்ட்ரீவ் - குரோஷியாவின் இவான் ஜுபிசிஸ் இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் இணையுடன் மோதுவர்.

இந்தியாவின் பயஸ் - ஆஸ்திரேலியாவின் பால் ஹான்லி இணை (தரநிலையில் 8-வது இடம்), பெருவின் லூயிஸ் ஹார்னோ - அர்ஜென்டினாவின் ஜான் மனோகா மற்றும் பொலிஷின் மனிசுஸ் ஃப்யூர்ஸ்டன்பெர்க் - மார்கோன் மாட்கோவ்ஸ்கி இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் இணையுடன் மோதுவுள்ளனர்.

இதனிடையே இன்று வெளியிடப்பட்ட டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இரட்டையர் பிரிவில், பூபதி தொடர்ந்து 11வது இடத்தில் நீடித்துள்ளார்.

இப்பட்டியலில் லியாண்டர் பயஸ் இரண்டு இடங்கள் பின்னடைவைச் சந்தித்து 24-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில், சானியா மிர்சா ஓரிடம் பின்னடைவைச் சந்தித்து 33-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் 20-20: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் 20-20: சென்னை அணிக்கு 2வது தோல்வி
அக்தரின் தடை நிறுத்திவைப்பு; ஐபிஎல்-லில் விளையாட அனுமதி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி
ஐபிஎல் : விறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி
அஸ்லான் - ஷா கோப்பை: ஹாக்கி அணி அறிவிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace