|
| ஐபிஎல் 20-20: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008 ( 10:15 IST ) | |
ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் போலக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் மும்பை அணி களமிறங்கியது. தகவாலே 14, ஜெயசூர்யா 34, தோமிலி 30, உத்தப்பா 22, போலக் 33 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 18.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேவாக் 40, டி வில்லியர்ஸ் 21, தினேஷ் கார்த்திக் 28, சோயிப் மாலிக் 24 ரன்கள் எடுத்தனர்.
இதன்மூலம், 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஷான் போலக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|