யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் 20-20: சென்னை அணிக்கு 2வது தோல்வி
ஜெய்ப்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 5 மே 2008   ( 10:01 IST )
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் பார்த்திவ் படேல், ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். வித்யூத் 5, பத்ரிநாத் 15, தோனி 1, மோர்கெல் 42, நிதினி 11 ரன்கள் எடுத்தனர்.

19வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. தன்வீர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14.2 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

ஸ்மித் 35, வாட்சன் 14, யூசுப் பதான் 8, அஸ்னோட்கர் 32 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 8 விகெட்டுகள் வித்தியாசத்தில் ராஜ்ஸ்தான் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயக்னாக தன்வீர் தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணிக்கு இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அக்தரின் தடை நிறுத்திவைப்பு; ஐபிஎல்-லில் விளையாட அனுமதி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப் அணி
ஐபிஎல் : விறுவிறுப்பான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி
அஸ்லான் - ஷா கோப்பை: ஹாக்கி அணி அறிவிப்பு
மைதானத்தில் மோதல்: கங்குலி, வார்னேவுக்கு அபராதம்
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணி முதல் தோல்வி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace