|
| அஸ்லான் - ஷா கோப்பை: ஹாக்கி அணி அறிவிப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), 3 மே 2008 ( 16:27 IST ) | |
மலேசியாவில் இம்மாதம் 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பை போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் 4 நாடுகள் ஹாக்கி தொடரின் இரண்டாவது சுற்று போட்டிகளுக்காக அங்குள்ள வீரர்களில் 8 பேர் இந்த அணியிலும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்பால் சிங், இக்னேஸ் திர்கி, பிரபோஜித் சிங், பெனால்டி கார்னர் சிறப்பு ஆட்டக்கரார் என்று தேர்வு செய்யப்பட்ட வி.ஆர். ரகுநாத் ஆகியோர் தேர்வு செய்யப்படவில்லை. ரகுநாத்திற்கு பதிலாக இளம் வீரர் திவாகர் ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பயிற்சியாளராக இருந்த கார்வாலோ தற்போது சிறப்புப் பார்வையாளராக பணியற்றுவார். தலைமை பயிற்சியாளர் பொறுப்பு ஜூனியர் அணியின் பயிற்சியாளரான ஏ.கே.பன்சலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் ஆலோசகர் ரிக் சார்ல்ஸ்வொர்த் அணியுடன் பயணம் மேற்கொள்கிறார்.
அணி விவரம்: பல்ஜீத் சிங், ஸ்ரீஜேஷ், திவாகர் ராம், சந்தீப் சிங், இன்னசன்ட் குல்லு, சமீர் பாக்ஸ்லா, சர்வஞ்ஜித் சிங், ரஞ்ஜித் சிங், பிக்ரம் காந், சர்தாரா சிங், ஏபி. சீயானா, விவேக், எஸ்.வி. சுனில், குர்விந்தர் சிங், துஷார் கான்டேகர், ஷிவேந்தர் சிங், மந்தீப் ஆன்டில், குர்பஜ் சிங்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|