யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணி முதல் தோல்வி
சென்னை (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008   ( 10:13 IST )
சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்துள்ளது.

இந்திய பிரிமியர் லீக்கின் (ஐபிஎல்) இருபது 20 கிரிக்கெட் போட்டி தொடரின் 20வது ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்டீபன் பிளமிங், பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க ஆட்டக்க்காரர்களாக களமிறங்கினர். பிளமிங் 13, பார்த்தீவ் பட்டேல் 21, வித்யுத் 54, தோனி 32, அல்பி மோர்கல் 28 ரன்கள் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்தது. டெல்லி அணி தரப்பில் மெக்ராத், ஆசிப், மகேஷ், ஷேவாக் மற்றும் பாட்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி ஆட்டத்தை தொடங்கியது. கேப்டன் ஷேவாக்கும், கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

ஷேவாக் 71, கம்பீர் 50 ரன்கள் எடுத்தனர். டிவில்லியர்ஸ் 26 ரன்னுடனும், தவான் 19 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இதனால், முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன் முறையாக தோல்வியை தழுவியுள்ளது. அதே நேரத்தில் டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
களிமண் தரையில் 101-க்கு 100 வெற்றி : நாடல் சாதனை
ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதில் வென்றது பஞ்சாப் அணி
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
ஐபிஎல் : டெல்லி அணி வெற்றி
ஐபிஎல் : சென்னை - டெல்லி அணி நாளை மோதல்
ஐபிஎல் போட்டிகளில் விளையாட அக்தருக்கு அனுமதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace