|
| ஐபிஎல் : ஐதராபாத்தை எளிதில் வென்றது பஞ்சாப் அணி |
| ஐதராபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 2 மே 2008 ( 09:50 IST ) | |
இந்தியன் பிரீமியர் லீக்கின் 19-வது இருபதுக்கு 20 போட்டியில், ஐதராபாத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி எளிதாக வென்றது.
ஐதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய யுவராஜ் சிங் தலைமையிலான பஞ்சாப் அணி, 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 167 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 84 ரன்களையும், ஜெயவர்த்தனே 45 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். சர்வான் 15 ரன்களையும், யுவராஜ் சிங் 14 ரன்களையும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி தரப்பில் சோய்ஸா மற்றும் கல்யாண்கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
முன்னதாக ஐதராபாத் தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76 ரன்களையும், கேப்டன் லஷ்மண் 48 ரன்களையும் எடுத்தனர்; அஃப்ரிதி 13 ரன்கள் எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பஞ்சாப் தரப்பில் பியுஷ் சாவ்லா 3 விக்கெட்டுகளையும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த் மற்றும் ககன்திப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியில் பஞ்சாப் அணியின் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|