|
| ஐபிஎல் : சென்னை - டெல்லி அணி நாளை மோதல் |
| சென்னை(ஏஜென்சி), வியாழக்கிழமை, 1 மே 2008 ( 13:20 IST ) | |
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் லின் 20 வது போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், ஷேவாக் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் இதுவரை 17 போட்டிகள் முடிந்துள்ளன. இன்று மாலை 2 போட்டிகள் நடக்கின்றன. இதில் ஜெய்ப்பூரில் மாலை 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான்- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.அடுத்து இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் ஐதராபாத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், 20-வது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் இரு அணியிலுமே பலம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணி இதுவரை சந்தித்த 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது.
சென்னை- டெல்லி அணிகள் இப்போதுதான் முதன் முதலாக சந்திக்கின்றன.
சென்னை அணியில் டோனி, பிளம்பிங், ரெய்னா, முரளீதரன், நிதினி போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.
டெல்லி அணியில் ஷேவாக், காம்பீர், டிவில்லர்ஸ், மெக்ராத், சோயீப் மாலிக், வெட்டோì, தில்சான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்று உள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|