யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் போட்டிகளில் விளையாட அக்தருக்கு அனுமதி
லாகூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 16:07 IST )
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாட, ஷோயிப் அக்தருக்கு தடையில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி அறிவித்துள்ளது.

அதேநேரத்தில், பாகிஸ்தான் அணிக்காக 5 ஆண்டுகளுக்கு விளையாடக்கூடாது என அக்தருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ள தடை நீடிக்கும் என்று ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தெரிவித்துள்ளது.

முன்னதாக, தன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறி அக்தர் முறையீடு செய்திருந்தார். அதில், தனது தவறுக்கு தாம் மிகுந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அக்தரின் முறையீட்டை விசாரித்த கமிட்டி, அவரது தடையை நீக்க மறுத்துவிட்டது. ஆனால், வெளிநாடுகளில் எங்கு வேண்டுமானாலும் கிரிக்கெட் விளையாடத் தடையில்லை என்று அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உத்தரவிட்டுள்ளது.

இதனால், ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடுவது உறுதியாகிவிட்டது.கோல்கத்தா அணியில் அவர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

பணம் காய்க்கும் மரமாகக் கருதப்படும் ஐபில் போட்டிகளில் விளையாட ஏதுவாக அக்தருக்கு சாதகமான சூழல் ஏற்பட்டிருப்பதற்கு , அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டதே காரணம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் : கோல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி
சியர்கேர்ள்ஸ் : பால் தாக்கரே கருத்து
ஹர்பஜனிடம் பிசிசிஐ கடுமையாக நடந்துகொள்ளாது: எஞ்சினீயர்
ஐபிஎல் : பெங்களூரை வென்றது சென்னை அணி; தோனி அபாரம்
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு முடக்கப்பட்டது ; கில் நீக்கம்
ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace