|
| சியர்கேர்ள்ஸ் : பால் தாக்கரே கருத்து |
| மும்பை(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 18:23 IST ) | |
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களை உற்சாகப்படுத்த சியர்கேர்ள்ஸ் பெண்களை ஆட விடுவதற்கு செலவிடும் தொகையை ஏழை விவசாயிகளுக்கு வழங்கலாம் என சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.
இதுகுறித்து தம்து கட்சி பத்திரிகையான ' சாம்னா ' வில் அவர் எழுதியிருப்பதாவது : கிரிக்கெட் விளையாட்டில் எதற்கு அரை குறை ஆடைகளுடன் பெண்கள் ஆட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.கிரிக்கெட் ஒரு விளையாட்டு. அது சூதாட்டம் அல்ல. அல்லது பார் டான்ஸும் அல்ல.
முறையாக உடை அணிந்து நடனமாடும் பார் டான்ஸ் பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே ஊதியம் தரப்படுகிறது. ஆனால், கவர்ச்சிகரமான உடைகளுடன் ஆடும் சியர் கேர்ள்ஸ் பெண்களுக்கு ரூ.15 முதல் 20 லட்சம் வரை அள்ளித் தருகிறார்கள்.
வெளிநாட்டுப் பெண்களுக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவற்றை உள்ளூர் பார் நடன அழகிகளுக்குக் கொடுக்கலாம். அல்லது வாழ வழியின்றி வாடி வதங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி ஏழை விவசாயிகளுக்குக் கொடுத்தால் அவர்களது குடும்பங்களாவது சந்தோஷமாக இருக்கும் என்று கூறியுள்ளார் பால்தாக்கரே.
உள்ளூரைச் சேர்ந்த நடிகை ராக்கி சாவந்த் கவர்ச்சிகரமாக ஆடியதற்காக அவருக்கு தடையெல்லாம் விதித்தார்கள்.ஆனால் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலோ, வெளிநாட்டு பெண்களை கவர்ச்சிகரமாக ஆட அனுமதிக்கிறார்.
காங்கிரஸ், தேசியவாதக காங்கிரஸ்கட்சியினருக்கு வெளிநாட்டுக்காரர்கள் மீதுதான் அதிக மோகம் உள்ளது. ஒரு வெளிநாட்டுக்காரரை பிரதமராக்க காங்கிரஸ்காரர்கள் தீவிரமாக முயல்கிறார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சியர்கேர்ள்ஸ் மூலம் தனது வெளிநாட்டுப் பற்றை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அதில் பால்தாக்கரே எழுதியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|