|
| ஹர்பஜனிடம் பிசிசிஐ கடுமையாக நடந்துகொள்ளாது: எஞ்சினீயர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008 ( 15:23 IST ) | |
ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜனுக்கு உரிய தண்டனை அளிக்கப்படுள்ள நிலையில், அவரிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக நடந்துகொள்ளாது என ஐபிஎல் போட்டி நடுவர் ஃபரூக் எஞ்சினீயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், இந்த விவகாரத்தில் ஹர்பஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை சற்று கடுமையானதுதான் என்பதை பிசிசிஐ உணரும் என்றும், அவரிடம் பிசிசிஐ கடுமையற்றே நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.
மேலும், இந்த சர்ச்சையில் ஸ்ரீசாந்தின் பங்கு ஒன்றும் சரியானது என்று கூறமுடியாது என்றும் இந்த விவகாரத்தை விசாரித்த ஃபரூக் தெரிவித்தார்.
ஸ்ரீசாந்தை தாம் அறைந்தது உண்மை என்று ஒப்புக்கொண்ட ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவருக்கு ரூ.3 கோடி அளவில் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|