யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : பெங்களூரை வென்றது சென்னை அணி; தோனி அபாரம்
பெங்களூர் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 29 ஏப்ரல் 2008   ( 09:40 IST )
இந்தியன் பிரீமியர் லீக்கின் 15-வது இருபதுக்கு 20 போட்டியில், பெங்களூர் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது.

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திராவிட் தலைமையிலான பெங்களூர் அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக டெய்லர் 53 ரன்களையும், ஜாஃபர் 53 ரன்களையும் எடுத்தனர்; காலிஸ் 14 ரன்களையும், கோக்லி 12 ரன்களையும் எடுத்தனர்; ஏனையோர் ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

சென்னை தரப்பில் கோனி 3 விக்கெட்டுகளையும், அமர்நாத் மற்றும் ஜோகிந்தர் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மோர்கெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக சென்னை அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்த்தது.

அணியின் கேப்டன் தோனி அதிரடியாக பேட் செய்து 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து, ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். ஹஸ்சே 47 ரன்களைச் சேர்த்தார். ராய்னா 28 ரன்களையும், படேல் 21 ரன்களையும் எடுத்தனர்; ஹெய்டன் 13 ரன்கள் எடுத்தார்.

பெங்களூர் தரப்பில் ஜாகீர் கான் 3 விக்கெட்டுகளையும், பிரவீன் குமார் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் சென்னை அணி கேப்டன் தோனி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு முடக்கப்பட்டது ; கில் நீக்கம்
ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை
மான்டி கார்லோ : இறுதிச் சுற்றில் பூபதி இணை தோல்வி
ஐபிஎல் : மும்பையை அபாரமாக வீழ்த்தியது ஐதராபாத் அணி
ஐபிஎல் : டெல்லி அணியை வீழ்த்தியது பஞ்சாப்
20-20: ராஜஸ்தான் `ஹாட்ரிக்' வெற்றி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace