யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஜோதிகுமரனுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் : கில்
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008   ( 12:56 IST )
ஹாக்கி அணியில் ஒருவரை சேர்ப்பதற்காக ரூ.2 லட்சத்தை லஞ்சமாக பெற்ற இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதிகுமரனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதிகுமரனின் செயலைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளே இல்லை என்று கடுமையாக சாடினார்.

அஸ்லான் ஷா கோப்பைக்கான இந்திய சீனியர் அணியில் டெல்லியை சேர்ந்த ஜுனியர் வீரர் ஒருவரை சேர்த்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஜோதிகுமரனிடம் லஞ்சமாக ரூ.5 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுக்கப்பட்டது.

இதை, தனியார் தொலைக்காட்சி ஒன்று ரகசியமாக படம்பிடித்து ஒளிபரப்பி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அவரை பதவியிலிருந்து விலகும்படி மத்திய விளையாட்டு துறை அமை‌ச்ச‌ர் எம்.எஸ்.கில் உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஜோதிக்குமரன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தோனேஷியா வந்தது ஒலிம்பிக் ஜோதி!
ஹாக்கியில் வீரரை சேர்க்க லஞ்சம்: சிக்கினார் ஜோதி!
ஐபிஎல் இருபதுக்கு 20: பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்
மலேசியாவில் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம்
டென்னிஸ் தரவரிசை : சானியா மிர்சா பின்னடைவு
சார்லஸ்டன் டென்னிஸ் : செரீனா சாம்பியன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...