|
| இந்தோனேஷியா வந்தது ஒலிம்பிக் ஜோதி! |
| ஜகார்த்தா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஏப்ரல் 2008 ( 12:04 IST ) | |
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் ஜோதி இன்று காலை இந்தோனேஷியா வந்தது.
சீன தலைநகர் பீஜிங்கில், வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இதற்காக கடந்த மாதம் 24ம் தேதி கிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் ஜோதி புறப்பட்டது.
பாகிஸ்தான், இந்தியா, மலேசியா உள்பட பல்வேறு நாடுகளை கடந்து, 14 வது நாடாக இன்று இந்தோனேஷியாவை ஒலிம்பிக் ஜோதி வந்தடைந்தது.
ஹாலிம் ராணுவ விமான நிலையத்தில் இன்று அதிகாலை 12.05 மணிக்கு சிறப்பு விமானம் வந்திறங்கிய ஒலிம்பிக் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் தேசிய விளையாட்டு கமிட்டியின் துணைத்தலைவர் ஹெண்டார்ஜி சோபாண்ட்ஜி மற்றும் விளையாட்டுத்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்றனர்.
ஜிலாரோ பாங்க் கார்னோ விளையாட்டு மைதானத்திலிருந்து இன்று மதியம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட 80 பேர் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|