யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹாக்கியில் வீரரை சேர்க்க லஞ்சம்: சிக்கினார் ஜோதி!
புதுடெல்லி (ஏஜென்சி), 22 ஏப்ரல் 2008   ( 11:22 IST )
ஹாக்கி அணியில் ஒருவரை சேர்ப்பதற்காக லஞ்சம் வாங்கி தனியார் தொலைக்காட்சி சேனலிடம் சிக்கிய இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிக்குமரன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளராக இருந்தது வந்தவர் ஜோதிக்குமரன். இவர் கடந்த 1994‌ம் ஆ‌ண்டு முத‌ல் ந்த பொறுப்பில் இருந்து வந்தார். அதோடு, தமிழ்நாடு ஹாக்கி சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அஸ்லான் ஷா கோப்பைக்கான இந்திய சீனியர் அணியில் டெல்லியை சேர்ந்த ஜுனியர் வீரர் ஒருவரை சேர்த்துகொள்ள வேண்டும் என்று கூறி தனியார் தொலை‌க்கா‌ட்‌சி குழுவினர் ஜோதிக்குமரனை அணுகினர்.

இதற்காக லஞ்சமாக ரூ.5 லட்சம் பேரம் பேசி, முன்பணமாக ரூ.2 லட்சம் கொடுத்தனர். இந்த பணத்தை ஜோதிக்குமரன் வாங்கியபோது தொலை‌க்கா‌ட்‌சி குழுவினர் கேமிராவில் ரகசியமாக பதிவு செய்தனர். பின்னர் இதை ஒளிபரப்பு செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக, ஜோதிக்குமரன் பதவியிலிருந்து விலகும்படி மத்திய விளையாட்டு துறை அமை‌ச்ச‌ர் எம்.எஸ்.கில் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ஜோதிக்குமரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஐபிஎல் இருபதுக்கு 20: பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்
மலேசியாவில் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம்
டென்னிஸ் தரவரிசை : சானியா மிர்சா பின்னடைவு
சார்லஸ்டன் டென்னிஸ் : செரீனா சாம்பியன்
ஐபிஎல் : மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி
வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: அபாரமாய் கைப்பற்றியது பாக்.
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...