|
| மலேசியாவில் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம் |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008 ( 16:11 IST ) | |
மலேசியாவில் இன்று மதியம் பலத்த பாதுகாப்புடன் ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டம் தொடங்கியது.
நூற்றுக்கணக்கான கமாண்டோக்கள் புடைசூழ, சுதந்திரச் சதுக்கத்தில் துவங்கிய இந்தத் தொடரோட்டம், 16.5 கிலோ மீட்டர் தூர அளவில் பெட்ரோனஸ் இரட்டை கோபுரம் வரை தொடர்கிறது.
சீனாவுக்கு எதிரான தங்களது கோபத்தை திபெத்தியர்கள் வெளிப்படுத்தக் கூடும் என அஞ்சப்படுவதால், ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்கும் விதமாக, 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டத்தைக் காண வந்திருந்த சீன நாட்டினர் பலர், தங்களது தாயகத்துக்கு ஆதரவான வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளுடன் இருந்தனர். அவற்றில், 'சீனாவை பிரிக்க முடியாது' என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
மலேசிய மக்கள் தொகையில் 25 சதவிகிதத்தினர் சீன வம்சாவளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|