யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஐபிஎல் : மும்பையை வீழ்த்தியது பெங்களூர் அணி
மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஏப்ரல் 2008   ( 09:42 IST )
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வீழ்த்தியது.

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திராவிட் தலைமையிலான பெங்களூர் அணி, 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

அந்த அணியின் பவுச்சர் (ஆட்டநாயகன்) சிறப்பாக பேட் செய்து ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 39 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக களமிறங்கிய திராவிட் 32 ரன்களைச் சேர்த்தார்; காலிஸ் 25 ரன்களையும், டெய்லர் மற்றும் கோக்லி ஆகியோர் தலா 23 ரன்களையும் எடுத்தனர்; துவக்க ஆட்டக்காரர் சந்திரபால் 16 ரன்களையும், அகில் ஆட்டமிழக்காமல் 3 ரன்களையும் எடுத்தனர்.

மும்பை அணி தரப்பில் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும், நேக்ரா, குல்கர்னி மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, மும்பை அணி தனது இன்னிங்ஸ்சில், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 48 ரன்களை எடுத்திருந்தார், ஜெயசூர்யா 29 ரன்களையும், பொல்லாக் 28 ரன்களையும் எடுத்தனர்.

பெங்களூர் அணி தரப்பில் ஜாகீர் கான் மற்றும் அகில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிரவிண் குமார் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியில் காயம் காரணமாக சச்சின் இடம்பெறாததால், மும்பை அணியை ஹர்பஜன் சிங் வழிநடத்தினார்.

முன்னதாக, கோல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், லஷ்மண் தலைமையிலான ஐதரபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கங்குலி தலைமையிலான கோல்கத்தா அணி வென்றது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வங்கதேசத்துக்கு எதிரான தொடர்: அபாரமாய் கைப்பற்றியது பாக்.
மலேசியா வந்தது ஒலிம்பிக் ஜோதி; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஈஸ்டோரில் டென்னிஸ்: அரையிறுதியில் பெடரர்!
ஷரபோவாவை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் செ‌ரீனா
ஐபிஎல் 20-20: திராவிட் அணியை வீழ்த்தியது கங்குலி அணி
ஒலிம்பிக் ஜோதி தாய்லாந்து வருகை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சண்ட
ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி...
யாரடி ‌நீ மோ‌கி‌னி
தரகு
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை...
மேலும் படிக்க|மேலும்...