|
| ஐபிஎல் 20-20: திராவிட் அணியை வீழ்த்தியது கங்குலி அணி |
| பெங்களூர் (ஏஜென்சி, சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2008 ( 13:29 IST ) | |
ஐபிஎல் கிரிக்கெட்டின் இருபதுக்கு 20 போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கங்குலி தலைமையிலான கோல்கத்தா நைட் ரைடஸ் அணி, திராவிட் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியை 140 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் இருபது 20 போட்டிகள் நேற்று பெங்களூரில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கங்குலி தலைமையிலான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், திராவிட் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியும் மோதின.
முதலில் டாஸ் வென்ற திராவிட் அணி, கங்குலி அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கங்குலி அணியில், கங்குலி 10, பாண்டிங் 20 மற்றும் ஹஸ்ஸி 12 ரன்கள் எடுத்தனர்.
அந்த அணியின் மெக்கல்லன் 158 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இவரும், முகமது ஹபீசும் (5 ரன்) கடைசி வரை களத்தில் நின்றனர்.
20 ஓவர்கள் முடிவில் கங்குலி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய திராவிட் அணியில், திராவிட் 2, ஜாபர் 6, கெல்லீஸ் 8, ஒயிட் 6, நாப்கே 9, ஜாகீர்கான் 3, ஜோஷி 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பிரவின்குமார் மட்டும் இரட்டை இலக்கமாக 18 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 15.1 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உதிரியாக கிடைத்த 19 ரன்கள்தான் பெங்களூர் அணிக்கு கிடைத்த அதிகபட்ச ரன்னாகும்.
இதன் மூலம் கங்குலி தலைமையிலான கோல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கோல்கத்தா அணி 2 வெற்றிப் புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் மெக்கல்லம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இன்றைய ஆட்டங்கள்:
1. பஞ்சாப்பின் கிங்ஸ் லெவன் அணியும், சென்னை கிங்ஸ் அணியுன் இன்று மோதுகின்றன. மொகாலியில் நடைபெறும் இந்த போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
2. டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|