யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஒலிம்பிக் ஜோதி தாய்லாந்து வருகை
பாங்காக் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008   ( 13:37 IST )
பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் ஜோதி இன்று தாய்லாந்து வந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் சீன தலைநகர் பீஜிங்கில் தொடங்குகிறது.

இதற்காக ஒலிம்பிக் ஜோதி கிரீஸ் நாட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வலம்வந்த ஒலிம்பிக் ஜோதி நேற்று இந்தியா சென்றது. அங்கிருந்து புறப்பட்டு சிறப்பு விமானம் மூலம் இன்று காலை தாய்லாந்து வந்து சேர்ந்தது.

பாங்காக் அருகேயுள்ள ராணுவ விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.40 மணிக்கு வந்திறங்கிய ஒலிம்பிக் ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஒலிம்பிக் ஜோதியை தடுக்க போராட்டக்காரர்கள் குவிந்ததால், உடனடியாக ஒலிம்பிக் ஜோதி நட்சத்திர ஓட்டலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாளை அங்கு நடக்கும் ஒலிம்பிக் தொடர் ஓட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். இதன் பின்னர், நாளை இரவு ஒலிம்பிக் ஜோதி தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்கு புறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சார்லஸ்டன் : காலிறுதியில் செரினா - ஷரபோவா மோதல்
ஐபிஎல் 20-20 கிரிக்கெட்: இன்று தொடக்கம்
அமைதியாக நடந்து முடிந்த ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்
சார்லஸ்டன் டென்னிஸ் : ஜான்கோவிக், ஷரபோவா முன்னேற்றம்
டெல்லி வந்தது ஒலிம்பிக் ஜோதி: பலத்த பாதுகாப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...