|
| டென்னிஸ் : மோனிகா செலஸ் ஓய்வு |
| மியாமி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 பிப்ரவரி 2008 ( 12:30 IST ) | |
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையும், 9 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான மோனிகா செலஸ் தனது ஓய்வை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2003-ல் இருந்து ஐந்து ஆண்டுகளாக இவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தாம் மீண்டும் விளையாட எண்ணியிருந்ததாகவும், ஆனால் அந்த முடிவை தற்போது கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
யூகோஸ்லோவியாவில் பிறந்த செலஸ், 1990-ல் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்சில் முதன்முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியில் 1991-ல் முதலிடம் வகித்த அவர், 1993 வரை இரண்டு வருடங்களாக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
1994-ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற செலஸுக்கு, 2003-ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸே அவர் விளையாடிய கடைசி போட்டியாகும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|