|
| நியூசி.க்கு எதிரான 3ம் போட்டி: இங்கிலாந்துக்கு 235 ரன்கள் இலக்கு |
| ஆக்லாந்து (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 15 பிப்ரவரி 2008 ( 11:14 IST ) | |
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருதினப் போட்டியில், இங்கிலாந்துக்கு 235 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஜாக்கப் ஓரம் மிகச் சிறப்பாக பேட் செய்து 88 ரன்கள் குவித்து, நியூசிலாந்தின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினார். அவருக்கு நல்ல இணையாக இருந்த விட்டோரி 42 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்து அதிகபட்சமாக டெய்லர் 31 ரன்களையும், துவக்க ஆட்டக்காரர் ரைடர் 23 ரன்களையும் எடுத்திருந்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் காலிங்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், சைட்பாட்டம் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மொத்தம் 5 ஒருதினப் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|