|
| ஆஸி. வீரர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளது : ஜெயவர்த்தனே |
| பெர்த் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 பிப்ரவரி 2008 ( 17:52 IST ) | |
ஆஸ்திரேலிய அணி வீரர்களிடம் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், ரிக்கி பான்டிங்கின் வழிநடத்துதலை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே தெரிவித்தார்.
முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 6-வது ஒருதினப் போட்டி நாளை பெர்த் நகரில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறும் நிலையில், இந்தப் போட்டியில் தனது அணி வெற்றி பெறுவது உறுதி என்று ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்தார்.
நாளைய ஆட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில், 'இந்தத் தொடரில் முன்னிலை வகிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது அணியினர் மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடி வருகின்றனர்' என்றார்.
முந்தைய போட்டியில் இந்தியாவிடம் தோல்வியுற்று இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்களிடம் நம்பிக்கையில் தளர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், 'ஆஸ்திரேலிய வீரர்கள் நெருக்கடியில் உள்ளனர். அந்த அணியின் இரண்டு அல்லது மூன்று ஆட்டக்காரர்கள் மட்டுமே நிலையாக பேட் செய்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|