|
| இந்திய அணியின் உடற்கூறு வல்லுனர் பதவி விலக முடிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 பிப்ரவரி 2008 ( 17:30 IST ) | |
இந்திய கிரிக்கெட் அணியின் உடற்கூறு வல்லுனர் (பிசியோதெரபிஸ்ட்) ஜான் குளோஸ்டர் தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
கடந்த 2005-ல் ஆண்டிரியு லீபஸுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட குளோஸ்டர் தனது ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் விலகல் குறித்த முடிவை, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருதினப் போட்டித் தொடருக்குப் பிறகு அவர் தனது பொறுப்பில் இருந்து விலகுகிறார்.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் நிரஞ்சன் ஷா கூறுகையில், இந்திய அணியின் உடற்கூறு வல்லுனராக தொடர்வதற்கு குளோஸ்டர் விரும்பவில்லை என்றும், அவர் தனது பதவியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்துவிட்டார் என்றும் கூறினார்.
மேலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், புதிய உடற்கூறு வல்லுனர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | |
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை... |
| |
|
|
|
|
|
|
|