யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
'ஐ.பி.எல். 20-20: பெங்களூர் அணிக்கு திராவிட் கேப்டன்'
புதுடெல்லி (ஏஜென்சி), வியாழக்கிழமை, 14 பிப்ரவரி 2008   ( 12:29 IST )
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) சார்பில் வரும் ஏப்ரலில் துவங்கவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் பெங்களூர் அணிக்கு திராவிட் கேப்டன் ஆகிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஐபிஎல் அமைப்பின் சார்பில் இருபதுக்கு 20 போட்டிகள் ஏப்ரல் 18ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் மாதம் வரை நடைபெறும்.

இதில் மொத்தம் 8 நகரங்களை கொண்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளை பல முக்கிய பிரமுகர்கள் பல கோடிகள் செலவில் வாங்கியுள்ளனர்.

இதில் கோல்கத்தா அணியை இந்தி நடிகர் ஷாரூக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் ஜெய்மேத்தா ஆகியோர் சேர்ந்து வாங்கியுள்ளனர். பெங்களூர் அணியை பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வாங்கியுள்ளார்.

கோல்கத்தா அணிக்கு, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியை கேப்டனாக்க ஷாரூக்கான் முடிவு செய்துள்ளார். இதேபோல், பெங்களூர் அணிக்கு மற்றொரு முன்னாள் கேப்டனான திராவிட்டை கேப்டனாக்க விஜய் மல்லையா முடிவு செய்துள்ளார்.

ஆட்டத்தின் துவக்க நாளன்று இந்த இரு அணிகளும் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் மோதுகின்றன.

இதேபோன்று மும்பை அணிக்கு சச்சினும், சண்டிகர் அணிக்கு யுவராஜ் சிங்கும் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. எனினும், எந்தெந்த அணிக்கு யார் கேப்டன் என்பது வரும் 20ம் தேதி பிறகே தெரியவரும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை - ஆஸி. நாளை மோதல்
ஐசிஎல்-லில் சமி, சக்லைன் உள்பட 10 பாக். வீரர்கள்
பிசிசிஐ-க்கு எதிராக ஐகோர்ட்டில் கபில்தேவ் வழக்கு
ஐபிஎல்.லில் சேர ஆஸி. வீரர்களுக்கு இறுதி கெடு
'ஐ.பி.எல். 20-20: கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன்'
2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி.
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace