யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
'ஐ.பி.எல். 20-20: கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன்'
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 13 பிப்ரவரி 2008   ( 12:11 IST )
இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) சார்பில் வரும் ஏப்ரலில் துவங்கவுள்ள இருபதுக்கு 20 போட்டியில் கோல்கத்தா அணிக்கு கங்குலி கேப்டன் ஆவார் எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ஐபிஎல் அமைப்பு சார்பில் வரும் இருவதுக்கு 20 போட்டிகள் ஏப்ரல் 18ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டிகள் வரும் ஜூன் மாதம் வரை நடைபெறும்.

இதில் மொத்தம் 8 நகரங்களை கொண்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகளை பல முக்கிய பிரமுகர்கள் பல கோடிகள் செலவில் வாங்கியுள்ளனர்.

இதில் கோல்கத்தா அணியை இந்தி நடிகர் ஷாரூக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் ஜெய்மேத்தா ஆகியோர் சேர்ந்து வாங்கியுள்ளனர்.

தனது கோல்கத்தா அணிக்கு, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியையே கேப்டனாக்க ஷாரூக்கான் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கங்குலியை தொடர்புகொண்டு பேசியுள்ள ஷாரூக்கான், அணி வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பை கங்குலியிடமே ஒப்படைத்துள்ளதாக கங்குலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல் விதிமுறையின்படி, ஒரு அணியில் உள்ளூர் வீரர்கள் 4 பேராவது இருக்க வேண்டும். வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் 4 பேர் வரை இருக்கலாம்.

இதனால், தனது அணியில் இடம் பெறும் வீரர்களை கங்குலி தேர்வு செய்து வருகிறார். பல முக்கிய வெளிநாட்டு வீரர்களும் கங்குலியின் தேர்வு பட்டியலில் உள்ளனர்.

கோல்கத்தா அணியின் கேப்டனாக வரும் 20ம் தேதி கங்குகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி.
மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வெற்றி எமதே:ஜெயவர்தனே
தோல்விக்கு காரணம் மழையே : தோனி விளக்கம்
8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை 131/2
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கைக்கு 196 ரன்கள் இலக்கு
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace