யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
2வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசி.
ஹாமில்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 பிப்ரவரி 2008   ( 11:36 IST )
ங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. மழை காரணமாக ஆட்டம் 36 ஓவர்களாக குறைக்கப்பட்டன.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 35.1 ஓவர்களில் 158 ரன்களுடன் சுருண்டது.

இதையடுத்து, டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 165 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கியது.

ரைடரும், விக்கெட் கீப்பர் மெக்கல்லமும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி, பந்துகளை விளாசினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை தத்தை கடந்ததோடு, தங்களது அணியை வெற்றி பெறவும் வைத்தனர்.

இதன் காரணமாக நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரைடர் 79, மெக்கல்லம் 80 ரன்களும் எடுத்தனர். ரைடருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. வரும் 15ம்தேதி ஆக்லாந்தில் 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வெற்றி எமதே:ஜெயவர்தனே
தோல்விக்கு காரணம் மழையே : தோனி விளக்கம்
8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கை 131/2
முத்தரப்பு கிரிக்கெட்: இலங்கைக்கு 196 ரன்கள் இலக்கு
முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா 119/3
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பொறுமையும், இரக்க மனமும் கொண்ட இவரிடம் நம்பகத்தன்மை மிகுதியாக இருக்கும். அன்பு நிறைந்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
இம்சை அரசன் வெற்றியை தொடர்ந்து, அதை விடவும் மிக அதிகமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ஆனால்...
த‌ங்க‌ம்
பீமா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நினைவாற்றலை பெருக்குவது மட்டுமின்றி, மூளையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுப்பதற்கு வழிவகை...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace