யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்திய ஹாக்கி அணிக்கு பாராளுமன்றத்தில் வாழ்த்து
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 19:19 IST )
ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி வாழ்த்து தெரிவிக்கையில், "ஆசிய கோப்பை ஹாக்கி சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றிருப்பது, மிகவும் கெளரவத்துக்குரியது" என்றார்.

மேலும், "இந்திய அணியால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. மக்களவையின் உறுப்பினர்கள் அனைவரும் என்னோடு சேர்ந்து, இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுக்களையும், எதிர்கால வெற்றிக்கான வாழ்த்துக்களையும் தெரிவிப்பர் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

கடந்த சில நாட்களாக, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தால் கடுமையான அமளி நிலவி வருவதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், "இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் இந்த விவகாரத்திலாவது ஒருமித்த கருத்து ஏற்படும் என்று நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறினார் சோம்நாத் சாட்டர்ஜி.

அதேபோல், தென் கொரிய அணியை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஹாக்கி அணிக்கு இன்று மாநிலங்களவையிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அக்தருக்கு வாழ்நாள் தடை : முன்னாள் கேப்டன் கோரிக்கை
யு.எஸ். ஓபன்: பெடரர் சாம்பியன்
ஹாக்கியில் இந்தியா வெற்றி : கருணாநிதி பதக்கம்
ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace