யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அக்தருக்கு வாழ்நாள் தடை : முன்னாள் கேப்டன் கோரிக்கை
கராச்சி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 செப்டம்பர் 2007   ( 19:04 IST )
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது ஆசிஃபை தாக்கிய ஷோயிப் அக்தருக்கு, வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆசிஃப் இக்பால் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அக்தரால் பாகிஸ்தான் அணிக்குக் கிடைத்த அவப்பெயரெல்லாம் போதும். ஆசிஃபை தாக்கிய விவகாரத்தில் அவருக்கு மன்னிப்பே வழங்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அக்தர் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற அவர், "அக்தருக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் கடந்த 6-ம் தேதியன்று பயிற்சி நடந்துகொண்டிருக்கும்போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் தனது 'பேட்'டினால், சக வீரரும் கேப்டனுமான ஆசிஃபை தாக்கினார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவில் நாளை நடைபெறும் டிவென்டி உலக கோப்பை போட்டிகளில் இருந்து நீக்கப்பட்ட அக்தர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன்: பெடரர் சாம்பியன்
ஹாக்கியில் இந்தியா வெற்றி : கருணாநிதி பதக்கம்
ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace