யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஹாக்கியில் இந்தியா வெற்றி : கருணாநிதி பதக்கம்
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில், மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் கருணாநிதி பரிசுகோப்பையை வழங்கினார்.

சென்னையில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதிச் சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதியது.

இதில், தொடக்க முதலே விறுவிறுப்பாக ஆடி முன்னணியில் இருந்த இந்திய அணி, இறுதியில் 7:2 என்ற கோல் கணக்கில் அமோக வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பால்ஜிட்சிங் தேர்வானார்.

பரிசளிப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு, இந்தியன் அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்கினார். இந்திய வீரர்களுக்கு பதக்கங்களையும் அணிவித்தார்.

இவ்விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி , விளையாட்டு துறை அமைச்சர் மைதீன்கான் மற்றும் ஹாக்கி கூட்டமைப்பு தலைவர் எம்.எஸ்.கில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர் வெற்றிகளை குவித்து, கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யு.எஸ். ஓபன்: பெடரர் சாம்பியன்
ஹாக்கி : கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?
நடுவர் கொடுத்த அவுட்: திராவிட் புகார்
யு.எஸ். ஓபன்: ஹெனின் சாம்பியன்
ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace