யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கடைசிப் போட்டி: இங்கிலாந்து வெற்றி
லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007   ( 22:27 IST )
இந்தியா, இங்கிலாந்து இடையேயான நாட்வெஸ்ட் தொடரில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 7 ஒருதினப் போட்டிகள் கொண்ட நாட்வெஸ்ட் தொடரில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று கடைசிப்போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களில் தோனி மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். தெண்டுல்கர் 30, யுவராஜ்சிங் 28, உத்தப்பா 22, கங்குலி 15, கம்பீர் 12, பொவார் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே அவுட் ஆகினர். திராவிட்டும், பியுஸ் சாவ்லாவும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 47.3 ஓவரிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 187 ரன்களில் சுருண்டது.

ஆர்.பி. சிங் ஒரு ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இங்கிலாந்து தரப்பில், பிலின்டாப், மாஸ்கரன்காஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பனேசர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றிக் கோப்பையை தட்டிச் செல்லலாம் என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

ரைட் மற்றும் பிரியர் இருவரும் ரன் எதுவும் எடுக்காமலேயே வெளியேறினர். பெல் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பீட்டர்சன் 71 ரன்களுடனும், காலிங்வுட் 64 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 36.2வது ஓவரிலேயே, 82 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் ஆர்.பி.சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம், 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி வெற்றிக் கோப்பையை தட்டிசென்றுள்ளது.

ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் பீட்டர்சனும், தொடர் நாயகனாக பெல்லும் தேர்வு செய்யப்பட்டனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கடைசிப் போட்டி: இங்கிலாந்து 64/2
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 188
கடைசிப்போட்டி: இந்தியா 155/8
கடைசிப்போட்டி: இந்தியா 106/5
கடைசிபோட்டி: இந்தியா திணறல்
கங்குலி அவுட்: இந்தியா 50/1
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
உற்சாகம்
நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு...
ஆரியா
பள்ளிக்கூடம்
ஆரோக்கியம்
நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace