|
| இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 188 |
| லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 19:07 IST ) | |
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருதினப் போட்டியில், இந்தியா 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 7 ஒருதினப் போட்டிகள் கொண்ட நாட்வெஸ்ட் தொடரில், இருஅணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று கடைசிப்போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
இந்திய வீரர்களில் தோனி மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். தெண்டுல்கர் 30, யுவராஜ்சிங் 28, உத்தப்பா 22, கங்குலி 15, கம்பீர் 12, பொவார் 10 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். திராவிட்டும், பியுஸ் சாவ்லாவும் ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்ததால் 47.3 ஓவரிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 187 ரன்களில் சுருண்டது.
ஆர்பி சிங் ஓரு ரன்னுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இங்கிலாந்து தரப்பில், பிலின்டாப், மாஸ்கரன்காஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆன்டர்சன் 2 விக்கெட்டுகளையும், பனேசர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றிக் கோப்பையை தட்டிச் செல்லலாம் என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|