|
| கடைசிப்போட்டி: இந்தியா 155/8 |
| லண்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2007 ( 18:03 IST ) | |
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருதினப் போட்டியின் 40வது ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு இந்தியா 155 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 7 ஒருதினப் போட்டிகள் கொண்ட நாட்வெஸ்ட் தொடரில், இருஅணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இன்று கடைசிப்போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றிபெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.
இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்களாக கங்குலியும், தெண்டுல்கரும் களமிறங்கினர்.
கங்குலி 15 ரன்களிலும், தெண்டுல்கர் 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கம்பீர் 12, உத்தப்பா 22, யுவராஜ் சிங் 28, மற்றும் பொவார் 10 ரன்களில் அவுட் ஆகினர்.
திராவிட்டும், பியுஸ் சாவ்லாவும் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர்.
தற்போது ஜாகீர் கான் 5 ரன்களும், தோனி 21 ரன்களும் எடுத்த நிலையில் களத்தில் உள்ளனர்.
40வது ஓவரில் இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் தரப்பில் ஆன்டர்சன், பிலின்டாப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மாஸ்கரன்காஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|