யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தமிழகம்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க ஜெயலலிதா வேண்டுகோள்
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 மே 2009   ( 12:32 IST )
"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்'' என்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொ‌ட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், வருகிற 27.5.2009 முதல் ஒரு மாத காலம் வரை நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அனைவரும், தத்தமது நாடாளுமன்றத் தொகுதிகளில், கிராமம் கிராமமாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மற்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றிய, நகர, பகுதி அளவிலான நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும்.

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களிலும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்றத் தொகுதி வாரியாக ஒன்றிய, நகர, பகுதி அளவிலான பொதுக்கூட்டங்களை, பொறுப்பாளர்களுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு,

சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களைத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என ஜெயல‌லிதா கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தமிழ‌ர்க‌ள் ‌மீது சிங்கள ராணுவம் தொட‌ர்‌ந்து தாக்குதல்
ஜல்லிக்கட்டு நடத்த ரூ.25 லட்சம் காப்பீடு :நீதிபதி அறிவுறுத்த‌ல்
ஈழ தமிழர் பாதுகாப்பு: தமிழகத்தில் எழுச்சி பேரணி
ஈழ விடுதலை போரை அழிக்கமுடியாது : திருமாவளவன்
இன்று இரவு தொலைக்காட்சியில் பேசுகிறார் பிரபாகரன்!?
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு வெ‌ளி‌யீடு: சென்னையில் 92.06 சதவீதம் தேர்ச்சி
செய்திகள்
தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ‌தி.மு.க. செயற்குழு‌வி‌ல் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவ‌ே‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நியூட்டனின் 3 ஆம் விதி - விமர்சனம்
வழக்கமான பழிவாங்கும் கதை.இரண்டே மணி நேரத்தில் பழிக்குப் பழி படலத்தை முடித்துக் கொள்வது தமிழுக்கு புதுசு...
நாளை நமதே - விமர்சனம்
கார்த்திக் அனிதா
ஆரோக்கியம்
நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்...
மேலும் படிக்க|மேலும்...